ஓட்டப்பிடாரம் அருகே அனுமதி பெறாமல் உயிர் மின்னழுத்த மின் கோபுரம் அமைக்கப்பட்டதை கண்டித்து டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டவரால் பரபரப்பு - நீண்ட போராட்டத்திற்கு பின்னர் கீழே இறக்கிய போலீசார்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே ராமச்சந்திராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. இவருக்கு கிராமத்தில் சொந்தமாக நிலம் உள்ளது. இந்நிலையில் அவரது இளைய மகன் சின்ன முனியசாமி என்பவர் , தனது குடும்பத்தினர் மற்றும் சகோதர, சகோதரிகளிடம் எவ்வித அனுமதி பெறாமல் கலந்து ஆலோசிக்கமால் தனியார் காற்றாலை நிறுவனத்திற்கு உயிர் அழுத்த மின் கோபுரம் அமைக்க அனுமதி கொடுத்தாக கூறப்படுகிறது.இதனால் தனியார் காற்றாலை நிறுவனம் மின் கோபுரம் அமைந்துள்ளது. இதை கண்டித்தும் அந்த நிலத்தில் குடும்பத்தில் அனைவருக்கும் உரிமை இருக்கும்போது ஒரு நபரிடம் மட்டும் அனுமதி பெற்று உயர் மின்னழுத்த மின்கோபுரம் அமைத்தது சட்ட விரோதம் என்று கூறி சின்ன முனியசாமியின் சகோதரர் பெரிய முனியசாமி தங்களது நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர் மின்னழுத்த மின்கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார் .நிலத்தில் அனைவருக்கும் சம உரிமை உள்ளதால், தனியார் காற்றாலை நிறுவனம் அனைவரிடமும் அனுமதி பெற வேண்டும், நிலத்தில் மின் கோபுரம் அமைத்ததற்கான தொகையை சமமாக பங்கிட்டு வழங்க வேண்டும் என்று கூறி பெரிய முனியசாமி போராட்டத்தில் ஈடுபட்டார். போராட்டத்தில் ஈடுபட்டவருடன், மணியாச்சி டிஎஸ்பி லோகேஸ்வரன், ஓட்டப்பிடாரம் போலீசார், வருவாய்த் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுப்பதாக மணியாச்சி டிஎஸ்பி லோகேஸ்வரன் கூறியதால் , போராட்டத்தில் ஈடுபட்ட பெரிய முனியசாமி தனது போராட்டத்தை கைவிட்டு கீழே இறங்கினார். முறையாக புகார் அளிக்க வேண்டுமே தவிர இது போன்ற தற்கொலை முயற்சியில் ஈடுபடக்கூடாது என டிஎஸ்பி லோகேஸ்வரன் அறிவுரை வழங்கினார். மேலும் தற்கொலை முயற்சி ஈடுபட்டதாக பெரிய முனிசாமி மீது ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி
டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டவரால் பரபரப்பு - நீண்ட போராட்டத்திற்கு பின்னர் கீழே இறக்கிய போலீசார்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
நெஞ்சில் ஏறி மிதித்து மனைவியை கொலை செய்த கணவன் கைது
அடுத்த
கோட்டநத்தம் கோவில் விவகாரம் - மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்.
இதையும் படிக்கலாம்
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கணவன்,மனைவி உட்பட மூன்று பேர் கைது!
30 Sep 2026
54 ஆண்டுகளாக நீளும் கண்ணீர்க் கதை.! பணியின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கணவருக்கு நஷ்டஈடு, பென்சன் கேட்டு 85 வயது மூதாட்டி போராட்டம்.!
17 Aug 2026
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026