எட்டயபுரம் அருகே தாய், மகள் கொலை வழக்கில் கைதான 3பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகேயுள்ள மேலநம்பிபுரம் கிராமத்தில் கடந்த மாதம் 3ந்தேதி சீதாலெட்சுமி, இவரது மகள் ராமஜெயந்தி இருவரும் படுகொலை செய்யப்பட்டு வீட்டில் இருந்த நகைகள் திருடு போய் இருந்தன. தாய் மகள் கொலை சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து இது தொடர்பாக மேலநம்பிபுரம் பகுதியைச் முனீஸ்வரன் (24), மகேஷ் கண்ணன் (எ) கண்ணன் (28), தாப்பாத்தி பகுதியை சேர்;ந்த வேல்முருகன் (22) 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைந்தனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பெயரில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தாய், மகள் கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேரையும் குண்டர் தடுப்பு காவல் தடுப்பு காவலுக்கு உத்தரவிட்டதை தொடர்ந்து 3 பேரும் குண்டர் தடுப்பு காவலுக்கு மாற்றப்பட்டனர்.