எட்டயபுரம் அருகே கார் கவிழ்ந்து தாய் மற்றும் 5 வயது மகன் உயிர் இழப்பு.6 பேர் படுகாயம்.



தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே சேலத்திலிருந்து திருச்செந்தூர் சென்ற கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் தாய் மகன் சம்பவ இடத்திலேயே பலியாயினர். உடன் சென்ற 6 பேர் படுகாயம் அடைந்தனர்.



சேலம் சூரமங்களத்தை சேர்ந்த சித்தன் மகன்  ராஜ்குமார் தனது மனைவி மகன் மற்றும் உறவினர்களுடன் ஒரு காரில் நேற்று இரவு புறப்பட்டு திருச்செந்தூர் நோக்கி சென்றனர். காரை ராஜ்குமார் ஓட்டினார். 



இன்று அதிகாலை கார் மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எட்டயபுரம் அருகேயுள்ள துரைச்சாமிபுரம் விலக்கு அடுத்து  சென்றபோது. எதிர்பாராத விதமாக சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ராஜ்குமார் மனைவி தமிழரசி (32) அவரது மகன் அஸ்வரதன் (5) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். 



மேலும் காரில் சென்ற அண்ணாமலை மனைவி விஜயா (60) செல்வராஜ் மனைவி தாமரைச்செல்வி என்ற சந்தியா (31) மகன் சபரீசன் (12) சித்தன் மகள் சுமதி (46) கோவிந்தராஜ் மகள் ரம்யா (12) காரை ஓட்டி சென்ற ராஜ்குமார் (35)  ஆகியோர் படுகாமடைந்தனர். தகவல் அறிந்து சென்ற எட்டயபுரம் போலீசார் காயமடைந்தவர்களை எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த இருவர் உடலையும் உடற்கூறு ஆய்விற்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.