தூத்துக்குடி மட்டக்கடை அருகே உள்ள வடக்கு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ஞானதீபம் என்பவரின் மனைவி குடோடிடல்டா. கணவன் - மனைவி பிரச்சனை காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 ஆண் மற்றும் ஒரு பெண் என 4 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் இவர்களது மூன்றாவது மகனான ஜெயின் புரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறான். ஜெயின் மாற்று சமூகத்தில் திருமணம் செய்துள்ள நிலையில் அடிக்கடி அவருக்கும் - அவரது தாய்க்கும் சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றிரவு தாய் குடோடில்டா தனியாக இருந்த நிலையில் மது போதையில் சென்ற ஜெயின் தனது தாயுடன் தகராறு செய்துள்ளார். இதில் தகராறு முற்றவே தாயை கத்தியால் குத்தி விட்டு ஜெயின் தப்பி ஓடி உள்ளான். இச்சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தூத்துக்குடி வடபாகம் காவல்துறையினர் விரைந்து வந்து கொலையான தாய் குடோலிட்டா உடலைப்கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தப்பியோடிய ஜெயினை தேடி வந்த நிலையில் தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் அருகே ஜெயினை வடபாகம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி
தாயை கத்தியால் குத்தி கொன்ற மகன் கைது !
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விமானக் கடத்தல் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி!
அடுத்த
"பொன்னூஞ்சல் வைபவம்" : பக்தி பரவசத்தில் கண்டுகளித்த பொதுமக்கள்!
இதையும் படிக்கலாம்
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026
ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!
12 Jul 2026
“ உண்ட வீட்டுக்கு இரண்டகம்” செய்த கொலை குற்றவாளி!
12 Jul 2026