சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு உத்தரவின்படி, நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் விமான கடத்தல் தடுப்பு ஒத்திகை ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதன்படி, தூத்துக்குடி விமான நிலையத்தில் இந்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பயணிகள் விமானக் கடத்தலை தடுக்கவும், அச்சுறுத்தலைச் சமாளிப்பதற்கான தற்செயல் திட்டத்தின் செயல்திறனைச் சோதிக்கும் வகையிலும், அசம்பாவிதங்களை எதிா்கொள்ளவும் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.