தூத்துக்குடியில் போலீசார் மீது மிளகாய் பொடி தூவியவருக்கு கை முறிவு!
தூத்துக்குடி சுந்தரவேல்நகர் பகுதியை சேர்ந்த சின்னத்துரை மகன் ஹை கோர்ட் மகாராஜா என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு சூரங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டுப் பகுதியில் வைத்து ஒரு கொலை முயற்சி வழக்கில்? கைதாகி பேராவூரணி சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் கடந்த 05-03-2024 தேதி அன்று பேராவூரணி சிறையில் இருந்து நீதிமன்ற விசாரணைக்காக, விளாத்திகுளம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திவிட்டு தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் வந்தபோது, பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசார் மீது மிளகாய் பொடி தூவி தப்பிச் சென்றார். இதனை அடுத்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்வேல்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார், தூத்துக்குடி செல்வநாயகபுரம் பகுதியில் பதுங்கி இருந்த ஹை கோர்ட் மகாராஜாவை கைது செய்ய முயற்சித்தபோது, ஹை கோர்ட் மஹாராஜா போலீசாரை அறிவாளால் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது, இந்நிலையில் அங்கிருந்து தப்பி ஓடிய ஐகோர்ட் மகாராஜா அப்பகுதியில் இருந்த பள்ளத்தில் கீழே விழுந்ததில் கையில் முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது? இதனை அடுத்து போலீசார் ஹை கோர்ட் மகாராஜாவை கைது செய்த சிறையில் அடைத்தனர்.