தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் மீது முஸ்லீம் லீக் கட்சியினர் புகார் மனு!
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி எம் பியும் தமிழ்நாடு வக்பு போர்டு தலைவர் ஆன நவாஸ் கனி மீது அவதூறு பரப்பும் வகையிலும் தரக்குறைவான வார்த்தைகளை உபயோகித்தும் மத மோதலை உருவாக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பரப்பி வருகிறார் இதற்க்கு இஸ்லாமிய அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் வேலூர் இப்ராஹீமை கைது செய்ய வலியுறுத்தி மனு அளித்து வருகின்றனர்.
இதனை அடுத்து இன்று தூத்துக்குடி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மாவட்ட தலைவர் மீராசா தலைமையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்பர்ட் ஜானை சந்தித்து மத மோதலை உருவாக்கும் வகையிலும் அவதூறு கருத்துக்களை மற்றும் நவாஸ் கனி எம்பி பற்றி தரக்குறைவாக தொடர்ந்து கருத்துக்களை பரப்பி வரும் பாரதிய ஜனதா கட்சி சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து மனு அளித்தனர்,அப்போது மாவட்ட செயலாளர் மன்னர் பாஜுல் அஸ்ஹாப், மாவட்ட பொருளாளர் திரேஸ்புரம் கே மீராசா, மாவட்டத் துணைத் தலைவர் நவரங் சகாப்தின் இப்ராஹிம், மாவட்டத் துணைச் செயலாளர் முகமது உவைஸ் பெத்தப்பா,சுல்தான் முகமது இஸ்மாயில், முகைதீன் மூசா,மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் எம் எஸ் எஃப் ரகுமான்,காயல்பட்டினம் நகர தலைவர் நூஹூ சாஹிப்,மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சலாகுத்தீன்,மாவட்ட STU பொருளாளர் முஹம்மது முஹ்யித்தீன்,நகர செயலாளர் அபூசாலிஹ் மாவட்ட வழக்கறிஞர் அணி சுலைமான் மற்றும் வர்த்தக அணி துணை அமைப்பாளர் அரபி மாவட்ட பிரதிநிதி சிராஜுதீன் மற்றும் முத்தையாபுரம் பிரைமரி தலைவர் செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.