தூத்துக்குடியில் நண்பனை துண்டால் கழுத்தை நெரித்துக் கொலை செய்தவர் கைது!
தூத்துக்குடி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் பரமசிவம் என்ற சிவா (41), இவரது நண்பன் மோகன்ராஜ் (43), பரமசிவம் என்ற சிவாவிற்கு மோகன்ராஜ் தான் பிரியாணி கடை வைத்துக் கொடுத்ததாக கூறப்படுகிறது, நேற்று பரமசிவன் வீட்டில் அனைவரும் வெளியூர் சென்றிருந்ததால் பகல் 2 மணி முதல் மாலை வரை இருவரும் மது குடித்துள்ளனர்,அப்போது ஏற்பட்ட வாய் தகராறில் ஆத்திரமடைந்த மோகன்ராஜ் துண்டால் பரமசிவத்தின் கழுத்தை நெரித்து கீழே தள்ளிவிட்டு சென்றுவிட்டார்,
இரவில் வீடு திரும்பிய பரமசிவத்தின் மனைவி இரண்டு மகள் ஒரு மகன் ஆகியோர் பரமசிவம் குடிபோதையில் மயங்கிய நிலையில் கிடப்பதாக கருதி தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்,அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பரமசிவம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர் மேலும் பரமசிவம் கழுத்து வீங்கிய நிலையில் இருந்து சந்தேகத்தை தெரிவித்துள்ளனர்,இது குறித்த தகவலைத் தொடர்ந்து தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி சுதிர், சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு மோகன்ராஜை உடனடியாக கைது செய்தனர்.