தூத்துக்குடி அருகே கிணற்றில் மிதந்த மூதாட்டி சடலம்!
தூத்துக்குடி மாவட்டம் செட்டியூரணி கிராமத்தை சேர்ந்த குருசாமி என்பவரின் மனைவி ரேணுகாதேவி என்ற மூதாட்டி (70), இவர் வீட்டில் இருந்து சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால், வீட்டில் உள்ளவர்கள் அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்தபோது மேலதட்டாபாறை செல்லும் சாலையின் அருகே உள்ள கிணற்றில் ரேணுகாதேவி உயிரிழந்த சடலமாக கிடந்துள்ளார், இதுகுறித்து தகவல் அறிந்த தட்டப்பாறை போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.