தூத்துக்குடியில் கடலில் விழுந்து மீனவர் தற்கொலை!




தூத்துக்குடி தாளமுத்து நகர் பகுதியில் சேர்ந்தவர் குரூஸ் மஸ்தான் மகன் பரிமளம் (47), மீனவரான இவர் கடற்கரையில் இருந்து சக மீனவர்களுடன்  கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, மற்றொரு மீனவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, படகில் இருந்து பரிமளம் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார், இதனை அடுத்து பரிமளம் உடலை மீட்ட தூத்துக்குடி மறைன்  காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.