தூத்துக்குடி வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு!
தூத்துக்குடி மாவட்டம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக,தூத்துக்குடி - வாகைகுளம் விமான நிலையத்திற்கு வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு,தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன், தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கா.இளம்பகவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்..