தூத்துக்குடி அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ, 85 லட்சம் மதிப்பிலான கடல் அட்டை மற்றும் 1500 கிலோ பீடி இலைகள் பறிமுதல்!


தூத்துக்குடி திரேஸ்புரம்- மேட்டுப்பட்டி கடற்கரை பகுதி வழியாக இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூபாய் 85 லட்சம் மதிப்பிலான 160 கிலோ கடல் அட்டை மற்றும் 1500 கிலோ பீடிஇலை பண்டல்கள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேன் மற்றும் இரு சக்கர வாகனத்தையும் கடலோர பாதுகாப்பு குழும கடல் காவல் நிலைய நிலைய ஆய்வாளர் பேச்சிமுத்து தலைமையிலான காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும் கடத்தலில் ஈடுபட்டு தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.