தூத்துக்குடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் கைது: 1 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!
தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில் இருசக்கர வாகனத்தில் வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் (28), மகேஷ்(20), மூர்த்தி(38),பாண்டி (45) ஆகிய 5 பேரையும் கைது செய்த பின் பாகம் காவல் நிலைய போலீசார் அவர்களிடம் இருந்த ஒரு லட்சம் மதிப்பிலான கஞ்சா மற்றும் நான்கு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.