தூத்துக்குடி மாநகராட்சி பள்ளியில் காலை உணவு திட்டத்தை எஸ்.பி பாலாஜி சரவணன் ஆய்வு மேற்கொண்டு குழந்தைகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட பின் அந்த தட்டை தானே கழுவி கொடுத்தார்.தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோல் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்த நிலையில் தூத்துக்குடி இரண்டாம் ரயில்வே கேட் அருகே உள்ள பாண்டுரங்கன் தெருவில் உள்ள மாநகராட்சி பள்ளியில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் காலை உணவு திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.அப்போது குழந்தைகளிடம் காலை உணவு எப்படி உள்ளது என கேட்டிருந்தார். ஆசிரியரிடம் உணவு தயாரிக்கும் முறை எங்கிருந்து தயாரிக்கப்படுகிறது என்பது குறித்து கேட்டறிந்த அவர் ஆசிரியரிடம் குழந்தைக்கு கொடுக்கும் உணவை மிகுந்த கவனத்துடன் வழங்க வேண்டும் மேலும் உணவை நீங்கள் முதலில் சாப்பிட்ட பிறகு குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.
இது தொடர்ந்து குழந்தைகளுடன் அமர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உணவு அருந்தினார் அப்போது குழந்தையுடன் தாங்கள் படித்து பெரிய அதிகாரியாக வேண்டும் என அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.இது தொடர்ந்து சாப்பிட்டு முடித்தவுடன் அவரது தட்டை ஆசிரியர் கேட்டவுடன் வேண்டாம் என்று சொல்லி விட்டு அவர் அந்த தட்டை கழுவி பிறகு அவர்களிடம் வழங்கினார். இதை தொடர்ந்து பள்ளியில் உள்ள கழிப்பிடங்களை ஆய்வு மேற்கொண்டு இதே போல் எப்போதுமே சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார் மேலும் பள்ளி வகுப்பறை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு குழந்தைகள் வருகை எண்ணிக்கை குறித்தும் கேட்டறிந்தார் அப்போது இந்த பள்ளியில் 169 குழந்தைகள் படிப்பதாகவும் இதில் 343 குழந்தைகள் காலை உணவு திட்டத்தில் உணவு அருந்துவதாகவும் ஆசிரியர்கள் தெரிவித்தனர். மேலும் பள்ளிக்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் 6,7,8 ம் வகுப்பு மாணவர்கள் மத்தியில் நீங்கள் ஒருநாள் உரையாட வேண்டும் என பெற்றோர்கள் கேட்டுக்கொண்டார் கண்டிப்பாக மீண்டும் வருகிறேன் என அவர் உறுதி அளித்துவிட்டு சென்றார்.
தூத்துக்குடி
குழந்தைகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட பின் அந்த தட்டை தானே கழுவி கொடுத்த எஸ்.பி பாலாஜி சரவணன்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பள்ளியில் மாவட்ட ஆட்சியர் அதிரடி ஆய்வு!
அடுத்த
கைக்குழந்தையுடன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி பெண் தீக்குளிக்க முயற்சி .
இதையும் படிக்கலாம்
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கணவன்,மனைவி உட்பட மூன்று பேர் கைது!
30 Sep 2026
54 ஆண்டுகளாக நீளும் கண்ணீர்க் கதை.! பணியின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கணவருக்கு நஷ்டஈடு, பென்சன் கேட்டு 85 வயது மூதாட்டி போராட்டம்.!
17 Aug 2026
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026