எட்டயபுரத்தில் துருப்பிடித்த தரமற்ற கம்பிகளுக்கு மாற்றாக புதிய கம்பிகள் மூலம் நடைபெறும் சாலை பணிகள் - அதிகாரிகள் நடவடிக்கை..
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 5-வது வார்டு பாறைத் தெருப்பகுதியில் தற்போது ஃபேவர் பிளாக் சாலை மற்றும் கால்வாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு அமைக்கப்படும் ஃபேவர் பிளாக் சாலைகள் தரமற்ற முறையிலும், பேவர் பிளாக் சாலைகளுக்கு இடையே கால்வாயை மூடி சிமெண்ட் கான்கிரீட் மூலம் இணைப்புச் சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு தரமான கம்பிகள் பயன்படுத்தப்படாமல், ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு துருப்பிடித்த நிலையில் காணப்படும் தரமற்ற இரும்பு கம்பிகளை கொண்டு பணிகள் நடைபெற்று வந்தது தொடர்பாக செய்திகள் வெளியாகின. இதனைத்தொடர்ந்து உடனடியாக மாவட்ட அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் அப்பகுதியில் ஆய்வு செய்து தரமற்ற கம்பிகள் மூலம் அமைக்கப்படும் சாலை பணிகளை தடுத்து நிறுத்தியதோடு, தரமான கம்பிகளை பயன்படுத்துமாறு எட்டயபுரம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு நடவடிக்கை மேற்கொண்டனர். இந்நிலையில் செய்தியின் எதிரொலியாக தற்போது தரமற்ற கம்பிகளுக்கு மாற்றாக புதிய தரமான கம்பிகள் வரவழைக்கப்பட்டு சாலைகள் மற்றும் கால்வாய்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இப்பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட அதிகாரிகள் உத்தரவிட்டு சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.