தூத்துக்குடி அருகே புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை?



தூத்துக்குடி அருகே உள்ள தருவைக்குளம் A.M.பட்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி என்பவரின் மகன் மெய்யப்ப போஸ் (25), இவர் மேல்மருதூரில் உள்ள தனியார் நிறுவனத்தை வேலை செய்து வந்துள்ளார், இந்நிலையில் இவருக்கு வருகிற 3-ம் தேதி திங்கள்கிழமை அன்று திருமணம் நடைபெற உள்ள நிலையில், மெய்யப்ப போஸ் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார், தகவல் அறிந்த தருவைக்குளம் காவல் நிலைய போலீசார் மெய்யப்ப போஸின் உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இரண்டு நாட்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் புதுமாப்பிள்ளை திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்தால் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பனையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது, மெய்யப்ப போஸ் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து தருவைகுளம் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.