எட்டயபுரத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி பேரூராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் மனு! 



தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படாமல் 2 வாரங்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுவதாகவும், தெருக்களில் உள்ள கழிவு நீர் கால்வாய்கள் சுத்தம் செய்யப்படாமல் குப்பைகள் சூழ்ந்து கழிவுநீர் தேங்கி காணப்படுகிறது. மேலும் தண்ணீர் வசதி இல்லாததால் அப்பகுதியில் உள்ள பொது சுகாதார கழிப்பிடத்தைக் கூட அங்குள்ள பொதுமக்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் இருந்து வருகின்றனர். இதனால் இன்று அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் எட்டையபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் தலைமையில் எட்டயபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் தங்களது அடிப்படை கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிக்கோரி கோரிக்கை மனுவை அளித்தனர். அதுமட்டுமின்றி, எட்டயபுரம் வார்டு பகுதியில் உள்ள தெருக்களில் அமைக்கப்பட்ட வரும் ஃபேவர் பிளாக் சாலையை மழைக்காலம் வருவதற்கு முன்பாக உடனடியாக விரைந்து அமைக்க வேண்டும் என்றும் பேரூராட்சி அலுவலரிடம் மக்கள் கேட்டுக்கொண்டனர்.