தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சிதம்பரம் பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது இங்கு 6 முதல் 10 வகுப்பு வரை வகுப்புகள் செயல்படுகின்றன 170 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர் . இங்கு கோவில்பட்டியைச் சேர்ந்த உஷா ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தார் இவர் தற்போது வில்லிசேரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் . இந்நிலையில் இதனை கண்டித்து அப்பள்ளியில் பயிலும் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த நாலாட்டின்புத்தூர் காவல் ஆய்வாளர் சுகாதேவி மற்றும் காவல்துறையினர் தற்போது மாணவ மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். கல்வித் துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் உறுதி அளித்ததை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
ஆசிரியை உஷா தேவி சில மாதங்களுக்கு முன்பு தான் வேறு பள்ளியில் இருந்து இங்கு பணிக்கு சேர்ந்துள்ளார். சிறப்பாக பாடம் நடத்துவது மட்டுமின்றி, மாணவர்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவது மட்டுமின்றி, மாணவர்களுக்கு பல்வேறு உதவிகளையும் ஆசிரியை உஷா செய்து வந்ததாகவும், எனவே ஆசிரியை பணிமாற்றம் செய்ததை ரத்து செய்ய வேண்டும் என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி
மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
"ஜி-20 நாடுகள் பன்னாட்டு கருத்தரங்கம்"
அடுத்த
அறங்காவலர் நியமன உத்தரவினை விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்.
இதையும் படிக்கலாம்
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கணவன்,மனைவி உட்பட மூன்று பேர் கைது!
30 Sep 2026
54 ஆண்டுகளாக நீளும் கண்ணீர்க் கதை.! பணியின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கணவருக்கு நஷ்டஈடு, பென்சன் கேட்டு 85 வயது மூதாட்டி போராட்டம்.!
17 Aug 2026
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026