ஓட்டப்பிடாரம் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடியில் சத்துணவு சாப்பிட்டு தரம் குறித்து ஆய்வு செய்த ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே பசுவந்தனை ஊராட்சிக்குட்பட்ட வடக்கு கைலாசபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 40க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி முன்பு மழைநீர் தேங்கி வருவதால் அதனை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதையடுத்து ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் L.ரமேஷ் நேற்று ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி மற்றும் தற்காலிகமாக செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டார் . அப்போது பள்ளியில் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடிய உணவை சாப்பிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பள்ளி குழந்தைகளிடம் படித்து முடித்து என்ன வேலைக்கு செல்வீர்கள் ? என்று கேட்டார். ஒரு குழந்தை மருத்துவர் ஒரு குழந்தை கலெக்டர் என தெரிவித்தார்.  மேலும் வடக்கு கைலாசபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி வளாகத்திற்குள் பேவர்பிளாக்,பள்ளியை சுற்றி சுற்று சுவர்,தெருக்களில் சாலை விரைவாக அமைத்து தரப்படும் என உறுதி அளித்தனர்.இந்த ஆய்வின்போது ஓட்டப்பிடாரம் கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் கிரி,பசுவந்தனை ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி சிதம்பரம்,ஊராட்சி செயலாளர் வேல்முருகன்,தலைமை ஆசிரியர் ஜோதி,ஆகியோர் உடன் இருந்தனர்..