விளாத்திகுளம் அருகே தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டுவண்டி பந்தயம் - மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்த 63 ஜோடி மாடுகள்! பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புளியங்குளம் கிராமத்தில் மாபெரும் மாட்டு வண்டியை பந்தயம் நடைபெற்றது. இதில் சின்ன மாடு,பூஞ்சிட்டு இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 63 ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு மின்னல் சீறிப்பாய்ந்தன, போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும ஓட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டியின் சார்பாக, பரிசுத்தொகை வழங்கி கௌரவிக்கப்பட்டது.இந்த மாபெரும் மாட்டு வண்டிகள் பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகளை சாலையின் இருபுறமும் நின்று கண்டு களித்தனர். நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி பந்தயத்தை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டையன் கொடியை அசைத்து தொடங்கி வைத்தார்.பூஞ்சிட்டு மாட்டுவண்டி பந்தயத்தின் முதல் சுற்று போட்டியை விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் கொடியை அசைத்து தொடங்கி வைத்தார்.பூஞ்சிட்டு மாட்டுவண்டி பந்தயத்தின் இரண்டாவது சுற்று போட்டியை குளத்தூர் உதவி ஆய்வாளர் முத்துராஜ் கொடியை அசைத்து தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.