தூத்துக்குடி அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு.
தூத்துக்குடி அருகே உள்ள குலையன்கரிசல் பகுதியை சேர்ந்தவர் செந்தூரப்பாண்டி மகன் நாராயணன் (38),இவர் தூத்துக்குடி முத்தையாபுரம் ஸ்பிக் நகர் பகுதியில் கோழி இறைச்சி கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கோழியைசுத்தம் செய்வதற்கு கோழிசுத்தம் செய்யும் இயந்திரத்தை இயக்கிய போது, எதிர்பாராத விதமாக நாராயணன் மீது மின்சாரம் பாய்ந்து நாராயணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.