தூத்துக்குடி அருகே சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் மாதவனத்தை சேர்ந்தவர் அமல்ராஜ் (47), இவர் அப்பகுதியில் நியாயவிலை கடையில் ஊழியராக வேலை செய்து வந்துள்ளார்.இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் சாத்தான்குளத்தில் இருந்து நாசரேத் வந்து கொண்டிருந்தபோது, தனியார் ஆம்னி பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் அமல்ராஜ் பரிதாபமாக உயிர் இழந்தார்.
மேலும் விபத்து ஏற்படுத்திய ஆமினி பேருந்து ஓட்டுனர் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த பிரேம்குமார் (21) மெஞ்ஞானபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.