தூத்துக்குடி அருகே பெயிண்டர் கொலை வழக்கில் ஒருவர் கைது.
தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு பகுதியை சேர்ந்த பெயிண்டர் ராஜா(45),என்பவரை அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் தண்ணீர் பிடிக்கும் பிரச்சனையின் போது வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடினார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் இன்று கோவளம் கடற்கரை உட்பட பகுதியில் மறைந்திருந்த சுரேஷை கைது செய்தனர்.
போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில், "எங்களுக்குள் மது அருந்துவதில் அடிக்கடி தகராறு ஏற்படும் நேற்று இரவு இரண்டு பேரும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தோம் அப்போது ராஜா என்னை பார்த்து முறைத்தார் நான் ஏன் முறைக்கிறாய் என்று கேட்டதற்கு அப்படித்தான் முறைப்பேன் என்று கூறியதால், எங்கள் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விலக்கி விட்டனர். பின்னர் 2பேரும் வீட்டுக்கு சென்று விட்டோம். ஆனாலும் எனக்கு ஆத்திரம் தீராதால் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து ராஜாவை வீட்டுக்குள் வெட்டிக் கொலை செய்தேன் என்று கூறியுள்ளார். கைது செய்யப்பட்ட சுரேஷை போலீசார், தூத்துக்குடி நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு பேரூரணி சிறைச்சாலையில் 15 நாள் காவலில் அடைத்தனர்.