தூத்துக்குடி அருகே தண்ணீர் பிடிப்பதில் தகராறு கூலி தொழிலாளி வெட்டி படுகொலை.
தூத்துக்குடி அருகே முள்ளக்காடு பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி மகன் ராஜா ( 45 ) கூலி தொழிலாளி. இவரது குடும்பத்திற்கும் எதிர் வீட்டில் குடியிருக்கும் ஜார்ஜ் மகன் சுரேஷ் ( 40 ) என்பவருக்கும் இடையே தண்ணீர் பிடிப்பதில்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சுரேஷ் அரிவாளால் ராஜாவை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ராஜா ரத்த வெள்ளத்தில் இறந்துள்ளார். இதையடுத்து சுரேஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.இதுகுறித்து தகவல் அறிந்த முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய சுரேஷை தேடி வருகின்றனர்.