வந்தே பாரத் ரெயில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நின்று செல்ல வலியுறுத்தி - தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட தேமுதிக..
கொரோனாவுக்கு பின்னர் கோவில்பட்டியில் நிற்காமல் செல்லக்கூடிய அனைத்து ரயில்களும் நிறுத்த வேண்டும் என்று தேமுதிக சார்பில் ஏற்கனவே மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை - நெல்லை இடையே இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரெயில் கோவில்பட்டி ரயில்வே நிலையத்தில் நின்று செல்ல வலியுறுத்தி தேமுதிக தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் தேமுதிகவினர் தலைமை தபால் அலுவலகம் முன்பு உள்ள தபால் பெட்டியில் தென்னக ரயில்வே கோட்டமேலாளருக்கு தபால் அனுப்பி வைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கோவில்பட்டி ரயில்நிலைய அலுவலரிடம் தங்களது கோரிக்கை மனுவினை வழங்கினர்.
இதில்மாநில மகளிரணி துணை செயலாளர் சுபப்பிரியா, மாவட்டஅவைதலைவர் கொம்பையாபாண்டியன் ,செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், பொதுக்குழு உறுப்பினர் காளிதாஸ், நகரசெயலாளர் நேதாஜிபாலமுருகன், ஒன்றியசெயலாளர் கோவில்பட்டி மேற்கு பெருமாள்சாமி , கிழக்கு பொன்ராஜ், நகரநிர்வாகிகள் பாலு ஆழ்வார் ஆகியோர் கலந்து கொண்டனர்
தூத்துக்குடி
தேமுதிக மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் வந்தே பாரத் ரெயில் கோவில்பட்டியில் நின்று செல்ல வலியுறுத்தி - தபால் அனுப்பும் போராட்டம்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
இசை மாமேதை நல்லப்பசாமி பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு விளாத்திகுளம் எம்எல்ஏ மரியாதை!
அடுத்த
அண்ணா பஸ் நிலையம் இடையே நேற்று இரவு முதல் இயக்கப்பட்ட சர்குலர் பஸ்...
இதையும் படிக்கலாம்
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026
ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!
12 Jul 2026
“ உண்ட வீட்டுக்கு இரண்டகம்” செய்த கொலை குற்றவாளி!
12 Jul 2026