தூத்துக்குடி மாவட்டம்  கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையம் - அண்ணா பஸ் நிலையம் இடையே நேற்று இரவு முதல் இயக்கப்பட்ட சர்குலர் பஸ்... பஸ் இயக்கப்படுவது குறித்தும், எந்த ,எந்த பகுதி வழியாக செல்கிறது என்பதனை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் கூடுதல் பஸ் நிலையம் மற்றும் அண்ணா பஸ் நிலையத்தில் டிஜிட்டல் பேனர் வைக்க வேண்டும்...அதுமட்டுமின்றி இயக்கப்படும் சர்குலர் பஸ்ஸில் கூடுதல் பஸ் நிலையம் - அண்ணா பஸ் நிலையம் - ரயில் நிலையம் வரை செல்லும் என போர்டு வைக்க வேண்டும்..மேலும் மாலையில் 5 மணி முதல் 10 மணி வரை மற்றும் காலையில் 4.30 மணி முதல் 7 மணி வரை அதிக மக்கள் ரயில் நிலையத்தை பயன்படுத்தும் சூழல் உள்ளது.  எனவே அந்த நேரங்களில் இந்த சர்க்குலர் பஸ்சினை ரயில்வே நிலையம் வரை  இயக்கினால் கூடுதலாக வருவாய் கிடைப்பது மட்டுமின்றி ‌ பொதுமக்களும் எளிதில் சென்று வர வாய்ப்பாக இருக்கும்.அதேபோன்று அதிகாலை 5 மணி முதல் 7:00 மணி வரை கூடுதல் பஸ் நிலையம் எதிரே உள்ள தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ஆம்னி பஸ்கள் பயணிகள் இறக்கி வருவதால், அந்த நேரத்தில் கூடுதல் பஸ் நிலையத்தில் இருந்து எதிரே உள்ள மின்வாரியம் அலுவலகம் வழியே சர்க்குலர் பஸ்ஸினை இயக்கினால் ஆம்னி பஸ்சில் இருந்து இறங்கக்கூடிய பயணிகளுக்கு வசதியாக இருக்கும்..