கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் பஸ்கள் நிறுத்த வேண்டிய ரேக்கில் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி செல்வதால், பஸ்களை நிறுத்த முடியமால் வெளியே நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும் பஸ் நிலையத்திற்குள் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் சூழ்நிலை உள்ளது. மேலும் பஸ் நிலையத்தில் பஸ்கள் திரும்பும் இடங்களிலும் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி செல்வதால் விபத்து ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து பஸ் நிறுத்தும் ரேக் மற்றும் பஸ் திரும்பும் இடங்களிலும் இரு சக்கர வாகனங்களை நிறுத்த கூடாது , அபராதம் விதிக்கப்படும் என்று காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நோட்டீஸ் ஒட்டி இருந்தாலும் அதையும் மீறி இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகிறது..எனவே அவ்வாறு நிறுத்தும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பது மட்டுமின்றி அந்த வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.