நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த முஸாபர் அவுலியா தர்ஹா சந்தனக்கூடு வைபவ பெருவிழாராமநாதபுரம் மாவட்டம் கமுதி-சுந்தரபுரம் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த முசாபர் அவுலியா தர்ஹா சந்தனக்கூடு பெருவிழா வைபவம் நடைபெற்றது.சந்தனக்கூடு ஊர்வலத்திற்கு  முன்பாக ட்ரம்ஸ் இஸ்லாமிய பாடல்கள் சிலம்பாட்டம்,தீப்பந்தாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.இந்த சந்தனக்கூடு சுந்தரபுரத்திலிருந்து முஸ்லிம் பஜார் வழியாக சின்னப்பள்ளி வாசல் நகர்ந்து ஊர்வலமாக வந்து சென்றடைந்தது.இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இஸ்லாமியர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.