தூத்துக்குடியில் ரத்ததான முகாமை அமைச்சர் கீதா ஜீவன் துவக்கி வைத்தார் !
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் 47 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் திமுக வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது, இந்த ரத்ததான முகாமை அமைச்சர் கீதாஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.
இந்த ரத்ததான முகாமில் திமுக தகவல் தொழில்நுட்ப அணியை சேர்ந்த 50 க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் வழங்கினர்.ரத்ததானம் வழங்கிய தகவல் தொழில் நுட்ப அணியினருக்கு அமைச்சர் கீதாஜீவன் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.