ஏரல் தாலுகா அலுவலகத்தில் இடைத்தரகர் கைது!


தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகா அலுவலகத்தில் மனு கொடுக்க வருபவர்களிடம், பணம் வாங்கிக்கொண்டு சான்றிதழ் பெற்றுத் தருவதாக கூறி, தொடர்ந்து பொதுமக்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட ஏரல் அருகே உள்ள மாங்கெட்டபுரம் கிராமத்தை சேர்ந்த இசக்கிமுத்து மகன் சண்முகராஜ் வயது (54)என்பவரை, ஏரல் தாசில்தார் கோபால்ஏரல் காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தார். இதை அடுத்து சண்முகராஜை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து ஏரல் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து ஏரல் தாசில்தார் கோபால் கூறுகையில் பொதுமக்கள் வந்து மனு அளிப்பதற்காகவே ஒரு நபரை நியமித்துள்ளோம். பொதுமக்கள் யாரும் வளாகத்தின் வெளியே நின்று கொண்டிருக்கும் தனிநபர்களிடம் மனு அளிக்க வேண்டாம் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு எழுதி கொடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.