தூத்துக்குடியில் ஆடு திருடியவர் கைது:ஆடுகள் பறிமுதல்!


தூத்துக்குடி டி. சவேரியார்புரம்  ஹவுசிங் போர்டு குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஜெகன்(45), என்பவர் வீட்டில் ரூபாய் 20,000  மதிப்புள்ள ஆடுகளை திருடிய தலைமுத்து நகர் சுனாமி காலனி பகுதியை சேர்ந்த சரவணகுமார் (23) என்பவரை தாளமுத்து நகர் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சரவணகுமாரிடம் இருந்த ரூபாய் 20,000 மதிப்புள்ள ஆட்டையும் பறிமுதல் செய்தனர், இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.