தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் ஒன்றியத்தில் உள்ள அம்மன்புரம் ஊராட்சியில் நடைபெற்ற 'மக்கள் களம்' மக்கள் குறை கேட்டல்  நிகழ்ச்சியில் திமுக துணைப் பொதுச் செயலாளரும்,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்று,குறைகளைக் கேட்டறிந்தார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும்,மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்  கி.செந்தில்ராஜ், தூத்துக்குடி கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, திருச்செந்தூர் ஒன்றிய தி.மு.க செயலாளர் ரமேஷ், அம்மன் புரம் ஊராட்சி தலைவர் ஞானராஜா,வருவாய் கோட்டாட்சியர் குருச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.