தூத்துக்குடியில் கட்டையால் அடித்து ஒருவர் கொலை.


தூத்துக்குடி ஏ. கைலாசபுரத்தை சேர்ந்த சுப்பையா என்பவரின் மகன் சரவணன் (48), இவர் மரம் வெட்டும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் 01-01-2025 அன்று வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பாததால், சரவணன் வீட்டில் உள்ளோர் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர் இந்நிலையில் இன்று ஏ- கைலாசபுரம் to சண்முகபுரம் செல்லும் சாலை காட்டுப்பகுதியில் சரவணன் கட்டையால் தாக்கப்பட்டு பலத்த காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து சரவணன் உடலை மீட்ட தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் உயிரிழந்த சரவணனுக்கு இரண்டு மனைவிகள் மற்றும் நான்கு குழந்தைகள் உள்ளனர். சரவணன் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.