ஓட்டப்பிடாரம் அருகே புகையிலை விற்பனையில் ஈடுபட்டவர் கைது!
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே குறுக்குச்சாலையில் ஓட்டப்பிடாரம் காவல் நிலைய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் இருசக்கரவாகனத்தில் சட்ட விரோதமாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 3 கிலோ புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது, இதனை அடுத்து புகையிலை விற்பனையில் ஈடுபட்ட குளத்தூர் பகுதியை சேர்ந்த பொன்னுத்துறை (37) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 3 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் இரு சக்கரவாகனம்,ரூ,3432 பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து ஓட்டப்பிடாரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.