பேருந்து வழித்தடத்தினை விளாத்திகுளம் MLA மார்கண்டேயன்  கொடியசைத்து துவக்கி வைத்தார்!

தூத்துக்குடி மாவட்டம்  விளாத்திகுளம்  அருகே உள்ள நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ - மாணவிகளின் கோரிக்கையை ஏற்று காலை மற்றும் மாலை வேலையில் விளாத்திகுளம் - நாகலாபுரம் அரசு கலைக்கல்லூரி- புதூர்-தவசலிங்கபுரம் செல்லும் பேருந்து வழித்தடத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார். 

நிகழ்வில் விளாத்திகுளம் அரசு பணிமனை மேலாளர் A.M. சாமி கோட்ட மேலாளர் ரமேஷன்,விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி,விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு,தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.