கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வரலாற்று துறை சார்பில் கார்கில் தினம் பள்ளி வளாகத்தில் கடைபிடிக்கப்பட்டது. 1999ம் ஆண்டு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் கார்கில் போர் நடைபெற்றது. 85 நடந்த போரில் 527 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.1363 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். 1999ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி வரை நடந்த கார்கில் போரில் இந்தியா வெற்றிபெற்றது.உயிர் தியாகம் செய்த 527 ராணுவ வீரர்களின் தியாகங்களை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் ஜூலை 26 கார்கில் வெற்றி தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த கார்கில் தினத்தில் பள்ளி மாணவிகள் இந்தியா வரைபடம் வரைந்து அதில் 527 ராணுவ வீரர்களின் தியாகங்களை நினைவு கூறும் வகையில் 527 அகல் விளக்கு ஏற்றி இந்தியாவின் பாதுகாப்பிற்கும்,ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் பாடுபட உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சிக்குபள்ளி தலைமையாசிரியை ஜெயலதா தலைமை வகித்தார்.
பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் முத்து முருகன் முன்னிலை வகித்தார். ஆசிரியை உமா மகேஸ்வரி அனைவரையும் வரவேற்றார். பள்ளி மாணவிகள் இந்தியா வரைபடத்தில் கார்கில் போரில் உயிர் நீத்த 527ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவுகூறும் வகையில் 527 அகல் விளக்கு ஏற்றி மரியாதை செலுத்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர்கள் உஷா ஜோஸ்பின், கண்ணன், சீனிவாசன், வரலாற்று துறை ஆசிரியர்கள் பிரியா, சுப்புலட்சுமி, பிரேமா, சகுந்தலா, ஸ்டெல்லா, சாந்தி, உமா மகேஸ்வரி உள்பட ஆசிரியர்கள், மாணவிகள்,பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஓவிய ஆசிரியர் ஆவடைத்தாய் நன்றி கூறினார்.
தூத்துக்குடி
அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கார்கில் தின விழா : 527 அகல் விளக்கு ஏற்றி மரியாதை!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
போலி மருத்துவர்கள் கைது - போலீசார் விசாரணை .
அடுத்த
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை அனைவரைக்கும் கிடைக்காது - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி?
இதையும் படிக்கலாம்
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026
ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!
12 Jul 2026
“ உண்ட வீட்டுக்கு இரண்டகம்” செய்த கொலை குற்றவாளி!
12 Jul 2026