தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.515.72 கோடியில் 363 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டப்பணி: கனிமொழி எம்.பி ஆய்வு!


தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் வட்டத்தில் உள்ள வட வல்லநாடு ஊராட்சியில், 363 கிராமங்கள் குடிநீர் வசதி பெறும் வகையில் நடைபெற்றுவரும் கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகளை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத்தலைவருமான கனிமொழி ஆய்வு செய்தார். தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், கயத்தார், கோவில்பட்டி, புதூர் மற்றும் விளாத்திகுளம் ஆகிய ஒன்றியங்களை சார்ந்த 363 குடியிருப்புகளுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் ரூ.515.72 கோடி மதிப்பிலான கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு கனிமொழி அன்று (23/05/2023) அடிக்கல் நாட்டி பணிகளைத் துவக்கி வைத்தார்.


தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் ரூ.515.72 கோடி மதிப்பிலான இந்த குடிநீர் திட்டத்தின் வழியாக கிட்டத்தட்ட 5 இலட்சம் மக்களுக்குத் தண்ணீர் தரக்கூடிய வாய்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

ஆய்வின்போது, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.