தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் சென்னை ராதா இன்ஜினியரிங் நிறுவன ம் சார்பில் கரி கையாளும் பணி மற்றும் சாம்பல் கையாளும் பனி குறித்து வருமான வரி துறை அதிகாரிகள் சுமார் ஆறு மணி நேரமாக நடத்திய சோதனை நிறைவு முக்கிய ஆவணங்களை கைப்பற்றி எடுத்துச் சென்றனர். முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் கடந்த மாதங்களுக்கு முன்பு அமலாக்கத்துறை மற்றும் வருமான வரி துறையினர் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி உறவினர்கள் அவரது பினாமி நிறுவனங்கள் அவரது தொடர்புடைய நிறுவனங்கள் எனத் தொடர்ந்து அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறையினர் சோதனை செய்து வந்தனர் இதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றபட்டதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து இன்று தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் கரி கையாளும் பணியை மேற்கொண்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய சென்னை ராதா இன்ஜினியரிங் நிறுவனத்தின் சார்பில் நடைபெறும் கரி கையாளும் பகுதியில் வருமானவரித்துறை கண்காணிப்பாளர் தலைமையிலான மூன்று வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை 6;30 மணி அளவில் சோதனை மேற்கொண்டனர். மேலும் சென்னை ராதா இன்ஜினியரிங் துணை நிறுவனமான திவ்யா ட்ரேடர்ஸ் என்ற சாம்பல் கையாளும் நிறுவனத்தின் கணக்குகள் குறித்தும் சோதனை நடத்தினர். இதேபோன்று தூத்துக்குடி துறைமுகத்தில் கரி கையாளும் தளத்தில் செயல்பட்டு வரும் சென்னை ராதா இன்ஜினியரிங் சார்பில் கப்பலில் இருந்து கரி இறக்கும் பகுதி என இரண்டு இடங்களிலும் சுமார் பத்துக்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.மேலும் இந்த சோதனை சென்னை ராதா இன்ஜினியரிங் நிறுவனம் பல்வேறு பணிகள் செய்யாமல் பணம் எடுத்ததாக வந்த புகாரை தொடர்ந்தும் வருமான வரி சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ராதா இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு அவர் மின்சார துறை அமைச்சராக இருக்கும் போது பல்வேறு பணிகளை செய்ய அனுமதி வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இதை தொடர்ந்து இன்று காலை சுமார் 6:30 மணி முதல் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் கரி கையாளும் பகுதி சாம்பல் கையாளும் பகுதி மற்றும் அனல் மின் நிலைய அலுவலகம் ஆகியவற்றில் ராதா இன்ஜினியரிங் மேற்கொண்ட பணிகள் குறித்த ஆவணங்களை வருமான வரிதுறை அதிகாரிகசுமார் ஆறு மணி நேரமாக சோதனை செய்தனர் இந்த சோதனைக்கு பின் முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாக தெரிகிறது . தூத்துக்குடி அனல்மின் நிலையம் மற்றும் துறைமுகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி
அனல் மின் நிலையத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
காலேஜ்ல கரண்ட் கட் : 540 மாணவர்களுக்கு சஸ்பெண்ட் கொடுத்த Principal!
அடுத்த
விமர்சையாக நடைபெற்ற அதிதூதர் மிக்கேல் ஆலயப் பெருவிழா கொடியேற்றம்!
இதையும் படிக்கலாம்
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026
ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!
12 Jul 2026
“ உண்ட வீட்டுக்கு இரண்டகம்” செய்த கொலை குற்றவாளி!
12 Jul 2026