தருவைகுளத்தில் விமர்சையாக நடைபெற்ற அதிதூதர் மிக்கேல் ஆலயப் பெருவிழா கொடியேற்றம்!தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் "வான் படை தளபதி அதிதூதர் மிக்கேல் ஆலய பெருவிழா கொடியேற்றம்" இன்று ஏராளமான கிறிஸ்துவர்கள் முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
ஆலயத்தின் கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று மாலை 6 மணிக்கு திருப்பவனியுடன் துவங்கிய விழாவானது, ஜெபமாலை நடைபெற்று பின்னர் மாலை 6.30 மணியளவில் ஆலயத்தின் பெருவிழா திருக்கொடியேற்றம் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் மறையுறை மற்றும் நற்கருணை ஆசீர் நடைபெற்றது. இதில் திரளாக கலந்து கொண்ட கிறிஸ்தவர்கள் மனம் உருகி பிரார்த்தனை செய்தனர்.
மேலும் 10 நாட்கள் விமர்சையாக கொண்டாடப்படும் ஆலயப் பெருவிழாவின் ஒவ்வொரு நாளும் தினமும் மாலை திருப்பலி, கூட்டுப்பிரார்த்தனை மற்றும் சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்று வருகின்ற 29-ம் தேதி காலை 6.00 மணியளவில் ஆலய பெருவிழா நிகழ்ச்சியானது ஆடம்பர கூட்டுப்பாடலுடன், சிறப்பு திருப்பலியுடன் திருத்தேர்பவனி பிரமாண்டமாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கான மொத்த விழா ஏற்பாடுகளையும் ஆலய பங்குதந்தை வின்சென்ட் மற்றும் பங்கு மக்கள் செய்துள்ளனர்
தூத்துக்குடி
விமர்சையாக நடைபெற்ற அதிதூதர் மிக்கேல் ஆலயப் பெருவிழா கொடியேற்றம்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அனல் மின் நிலையத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை!
அடுத்த
ரூ.56.40லச்சம் மதிப்பீட்டில் சுகாதார மைய கட்டிட பணிகளை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்த விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன்.
இதையும் படிக்கலாம்
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026
ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!
12 Jul 2026
“ உண்ட வீட்டுக்கு இரண்டகம்” செய்த கொலை குற்றவாளி!
12 Jul 2026