தூத்துக்குடியில் குருபெயர்ச்சியை முன்னிட்டு குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு இடம்பெயர்ந்ததை முன்னிட்டு பாகம்பரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் தட்சிணாமூர்த்தி சிறப்பு வழிபாடு!
குருபகவான் ஆன தட்சிணாமூர்த்தி இன்று ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பிற்பகல் ஒன்று 40 மணியளவில் இடம்பெயர்கிறார் இதை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள பழமையான பாகம் பிரியாள் உடனூறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள தட்சிணாமூர்த்தி சன்னதியில் தட்சிணாமூர்த்திக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது, இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குரு பகவானை வழிபட்டு சென்றனர்.