கோவில்பட்டி சொர்ணா நர்சிங் கல்லூரியில் அஸ்ட்ரோ கிளப் கிளப் சார்பில் மடிப்பு நுண்ணோக்கி செயல்முறை பயிற்சி நடந்தது. தென் ஆப்பிரிக்கா உகாண்டாவில் உள்ள மலைவாழ் பகுதிகளில் ஏராளமான குழந்தைகள் இறந்தனர். குழந்தைகளின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்வதற்கு மலைவாழ் பகுதிக்கு மைக்ரோஸ்கோப் கொண்டு செல்ல இயலவில்லை. இதற்கு மாற்றாக எளிய முறையில் எடுத்து செல்லும் வகையில் மடிப்பு நுண்ணோக்கி தயார் செய்ய முடிவு செய்தனர். கலிபோர்னியாவில் உள்ள ஸ்டேன்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர்கள் னு பிரகாஷ், ஜிம்சைல் பிஸ்கி ஆகியோர் மடிப்பு நுண்ணோக்கியை தயார் செய்து பயன்படுத்தி வந்தனர்.
கோவில்பட்டி சொர்ண நர்சிங் கல்லூரியில் மடிப்பு நுண்ணோக்கி தயார் செய்து பயன்படுத்தி அறிக்கை தயார் செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு முதல்வர் சாந்திபிரியா தலைமை வகித்தார். அஸ்ட்ரோ கிளப் ஒருங்கிணைப்பாளர்கள் சுரேஷ்குமார்,முத்து முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை முதல்வர் தமயந்தி வரவேற்றார். மதுரை ஈடன் கல்வியியல் கருத்துக்கூட இயக்குனர் மொ.பாண்டியராஜன் மடிப்பு நுண்ணோக்கி தயாரித்தல் மற்றும் செயல்படுத்துதல் குறித்து பயிற்சி அளித்தார்.
இதில் தமிழ்நாடு அஸ்ட்ரோ சயின்ஸ் சொசைட்டி மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி,மேனாள் தாய்கோவங்கி மேலாளர் ராமசுப்பு,ஆசிரியை பாண்டிசெல்வி உள்பட நர்சிங் கல்லூரி மாணவிகள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். முடிவில் நுண் உயிரியியல் ஆசிரியை விநோதா நன்றி கூறினார்.
தூத்துக்குடி
மடிப்பு நுண்ணோக்கி செயல்முறை பயிற்சி!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அபிராமம் நவசக்தி விநாயகர் ஜெயந்தி விழா மின்னொளி அலங்கார தேரில் வீதி உலா!
அடுத்த
4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை கைதி கைது!
இதையும் படிக்கலாம்
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026
ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!
12 Jul 2026
“ உண்ட வீட்டுக்கு இரண்டகம்” செய்த கொலை குற்றவாளி!
12 Jul 2026