விளாத்திகுளம் அருகே உள்ள அருங்குளம் கிராமத்தில் "அட உட்காருங்க சார்..." Collector-ஐ கலாய்த்து குலுங்கி குலுங்கி சிரித்த அமைச்சர், எம்.பி : மக்கள் களம் நிகழ்ச்சியில் சிரிப்பலை! தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அருங்குளம் கிராமத்தில் இன்று தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி.-யின் "மக்கள் களம்" நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் உட்பட பல்வேறு துறைஅரசு அதிகாரிகள், பணியாளர்கள், கட்சியினர், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் நிகழ்ச்சியின் துவக்கத்தில் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி பொதுமக்களிடம் பேசத் தொடங்கிய போது... அருகில் உள்ள கோவிலில் இருந்து 8 மணி அலாரம் ஒலித்து 'கந்த குரு கவசம்' பாடல் அதிக சத்தத்துடன் ஒலித்தது... இதனால் பேச்சை நிறுத்திய மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி பின்னர் சத்தம் நின்றவுடன் மீண்டும் பேசத் தொடங்கிய போது மீண்டும் பாடல் ஒலிக்கவே.... அமைச்சர் கீதாஜீவன் மற்றும் கனிமொழி எம்.பி. ஆட்சியர் லட்சுமிபதியை "உட்காருங்க சார் என்ற கையசைத்து குலுங்கி குலுங்கி சிரித்தனர். இதனால் ஒட்டுமொத்த மக்கள் களம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்கள் அனைவருக்கும் இது சிரிப்பலையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து கோவில் பாடல் ஒலித்து முடித்த பிறகு மக்கள் களம் நிகழ்ச்சி நடைபெற்றது.... பின்னர் பொதுமக்களிடம் பேசிய கனிமொழி எம்.பி. மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
தூத்துக்குடி
"அட உட்காருங்க சார்..." Collector-ஐ கலாய்த்து குலுங்கி குலுங்கி சிரித்த அமைச்சர், எம்.பி : மக்கள் களம் நிகழ்ச்சியில் சிரிப்பலை!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
"100 நாள் வேலை திட்டத்தில், நம்மளோட பங்கு பணம் கொடுத்தாச்சு...மத்திய அரசுதான் கொடுக்கல.." - கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு!
அடுத்த
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மாநில அளவிலான மாபெரும் மாட்டு வண்டி பந்தயம்!
இதையும் படிக்கலாம்
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026
ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!
12 Jul 2026
“ உண்ட வீட்டுக்கு இரண்டகம்” செய்த கொலை குற்றவாளி!
12 Jul 2026