தூத்துக்குடி மத்திய மீன்வளத்துறை அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா பங்கேற்ற விழா விசைப்படகு மீனவர்களுக்கு ஆழ் கடல் மீன்பிடிப்பிற்கு அனுமதி வழங்க வேண்டும் மேலும் மீனவர்களை பாதுகாக்கும் வகையில் கடல் ஆம்புலன்ஸ் சேவை திட்டம் துவங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை.தூத்துக்குடி மாவட்டம் வேம்பார், பெரியசாமிபுரம், கீழவைப்பார், சிப்பிகுளம், பட்டினமருதூர், தருவைகுளம்,திரேஸ்புரம், தூத்துக்குடி, மனப்பாடு, வீரபாண்டியபட்டினம், திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நாட்டுப் படகு மற்றும் விசைப்படகு  மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.தூத்துக்குடியில் மத்திய அரசின் சாகர் பரிக்ரம் திட்டத்தின் கீழ் மீனவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்றது இதில் மத்திய மீனவளத் துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா இணை அமைச்சர் எல் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர் இந்த விழாவில் விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வைத்தனர்.தூத்துக்குடி விசைப்படகு உரிமையாளர் சங்கம் சார்பில் தூத்துக்குடியில் இருந்து செல்லும் விசைப்படகுகளுக்கு  ஆழ்கடலில் தங்கி மீன் பிடிக்க அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர் இதேபோன்று விசைப்படை தொழிலாளர்கள் கடலுக்கு செல்லும் மீனவர்கள் கடலில் ஏற்படும் விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன இதை தவிர்க்க மத்திய அரசு ஆழ்கடல் ஆம்புலன்ஸ் சேவையை துவங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர் .மேலும் சங்கு குழி மீனவர்கள் சங்கு குளிப்பில் ஈடுபட்டு வயது முதிர்ந்த சங்கு குழி மீனவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.இந்நிலையில் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது பார்வையாளர்கள்  அமர்ந்திருந்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த எல்இடி திரை திடீரென கீழே சரிந்து விழுந்தது இதில் மத்திய அரசு தொலைக்காட்சி நிறுவன ஊழியர் ஒருவருக்கு கையில் காயம் ஏற்பட்டது அதிர்ஷ்டவசமாக வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை இதன் காரணமாக விழாவில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.