எட்டயபுரம் தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து :  சம்பவ இடத்திலேயே இளைஞர் பலி!



தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள முடுக்கு மீண்டான்பட்டியைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் மகன் வைகுண்டராஜா(24). இவர் கோவில்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எலக்ட்ரிசியனாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் தூத்துக்குடியில் நடைபெற்ற இவருடைய நண்பரின் திருமணத்திற்காக  இவரும் இவருடைய நண்பரான கோவில்பட்டி காந்தி நகரை சேர்ந்த திருவெங்கடேசன் மகன் முனீஸ்வரன்(23) என்பவரும் இருசக்கர வாகனத்தில் இன்று காலையில் புறப்பட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு மாலையில் தூத்துக்குடியில் இருந்து கோவில்பட்டி நோக்கி எட்டையபுரம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது, எட்டையபுரம் அருகேயுள்ள மேலஈரால் விலக்கின் அருகில் வந்து கொண்டிருந்தபோது சாலையோரத்தில் பழுதாகி நின்றுகொண்டிருந்த டிப்பர் லாரி மீது எதிர்பாராத விதமாக இவர்கள் வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வைகுண்ட ராஜா தலையில் காயமடைந்து சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் முனீஸ்வரனுக்கு பலத்த காயமடைந்தார். இதையடுத்து விபத்து குறித்து தகவல் தகவல் அறிந்தவுடன் எட்டையபுரம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயமடைந்த முனீஸ்வரனை எட்டையபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து முதலுதவி சிகிச்சைக்குப்பின் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் உயிரிழந்த 24 வயது இளைஞர் வைகுண்ட ராஜாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக எட்டையபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.