நடிகர் விஜய்க்கு எப்படி நடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கின்றனர் அவர் அழகாக வசனத்தை பேசி நடித்துவிட்டு சென்று விடுகிறார்:சூட்டிங் மாதிரி இல்லாமல் நல்லவேளை ஒரே டேக்கில் எடுத்து முடித்து விடுகிறார்கள் - அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு!




தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி   எட்டயபுரத்தில் திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் திமுக வடக்கு மாவட்ட செயலாளரும் , தமிழக சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர கீதா ஜீவன் கலந்து கொண்டு பேசுகையில்,தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் 80 சதவீதத்தை நிறைவேற்றி உள்ளார்.



அவர் முதல்வராக பதவி ஏற்றதும் போட்ட முதல் கையெழுத்து மகளிருக்கான விடியில் பயணத்திற்கு தான் , 5 பவுனுக்கு கீழ் நகைக் கடன் தள்ளுபடி, கொரோனா காலத்தில் ரூ.4 ஆயிரம் நிதி உதவி , மகளிர் சுய உதவி குழு கடன்கள் தள்ளுபடி, புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், ஒரு கோடியே 15 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை, உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி வளர்ச்சி திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு , விவசாயிகளுக்கு மானிய விலையில் இயந்திரங்கள் வழங்குதல், விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்களில் கடன் பெறுவது எளிமைப்படுத்துதல், மக்களை தேடி மருத்துவம், மாற்றுத்திறனாளிகள் முதியோர் உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது.


கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு காரணமாக அரசு பள்ளிகள் புத்துணர்ச்சி பெற்றுள்ளது. அதே போன்று தான் மருத்துவத்துறையும் , மொத்தமாக 26582 பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு தமிழக முதல்வரின் செயல்களை அடுக்கிக் கொண்டே போகலாம். தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் ஏற்பட்டுள்ளது மட்டுமின்றி மீண்டும் வாக்களிக்க மக்கள் தயாராக உள்ளனர்.



இதைப் பார்த்து எதிர்க்கட்சிகள் எல்லாம் சேற்றை வாரி அள்ளி வீசக்கூடிய அளவிற்கு பொய்யான தகவல்களை சொல்லி வருகின்றனர். 


இன்றைக்கு ஒன்றை சொல்வதை நாளைக்கு மறந்துவிட்டு வேற எதையோ பேசுகின்றனர்.அது பாஜக தலைவராக இருந்தாலும் சரி, நாம் தமிழராக இருந்தாலும் சரி, இல்லை புதுசாக கட்சி தொடங்கியவராக (விஜய் )இருந்தாலும் சரி,அவருக்கு  (விஜய்) கரெக்டா  வசனம் வரும், எப்படி நடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிறார்கள் அழகாக 
வசனத்தை பேசி நடித்துவிட்டு சென்று விடுகிறார்.



நீங்க கரெக்டா நோட் பண்ணி பாருங்க ரசிக பெருமக்களாய் இருந்தாலும் தம்பிமாராக இருந்தாலும் தங்கைமாராக இருந்தாலும் அவரை (விஜய்)  நோட் பண்ணி பார்த்தால் உங்களுக்குத் தெரியும்,சூட்டிங் மாதிரி இல்லாமல் நல்லவேளை ஒரே டேக்கில் எடுத்து முடித்து விடுகிறார்கள்,முதல்வராக வேண்டும் என்பதற்காக சிலர் (விஜய்) கட்சி தொடங்கியுள்ளனர்.  நாம் அதைப் பற்றி பேச வேண்டியது இல்லை,குட்டையை குழப்பி மீன்பிடிக்க வேண்டும் அல்லது நமக்கு ஆதரவாக ஏதாவது வேண்டும் என்பதற்காக ஒன்றிய அரசு ஏதாவது ஒரு பிரச்சனையை கிளப்பிக் கொண்டிருக்கிறது.



இந்தி திணிப்பு எதிர்ப்பு என்பது பேரறிஞர் அண்ணா காலத்தில் இருந்து நடைபெற்று பலர் அதற்காக இன்னுயிர்  நீத்துள்ளனர். ஆகையால் தான் இன்றைக்கு நாம் இருமொழிக் கொள்கையில் நிற்கிறோம்,உலக நாடு முழுவதும் தமிழர்கள் என்று அதிகமாக உள்ளனர்.  மென்பொறியியல் துறையில் தமிழர்கள் முக்கிய பங்கு வைக்கின்றனர் . இதற்குக் காரணம் 1998 இல் கணினி கல்வியை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தமிழில் கொடுத்தார்.


நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்கள் அடுத்த மலைக்கு இருக்குமா? இல்லை என்று தெரியாது, இப்ப எதுக்கு முன்மொழிக் கொள்கை புதிய கல்விக் கொள்கையில் கையெழுத்து போட்டால் தான் நிதி தருவோம் என்று சின்னப் பிள்ளைகள் சண்டை மாதிரி கூறுகின்றனர். ஆனால் தமிழக முதல்வர் இதற்கு பயப்படவில்லை கையெழுத்து போட மறுத்துவிட்டார். தமிழகத்தில் சி.பி.எஸ்.சி பள்ளிகளில் ஹிந்தி உள்ளது. சில தனியார் பள்ளிகளிலும் இந்தி உள்ளது. ஹிந்தி சபா மூலமாகவும் ஹிந்தி கற்று வருகின்றனர். அதை யாரும் தடுக்கவில்லை. எந்த மொழியை வேண்டுமென்றால் கற்றுக் கொள்ளலாம். . ஆனால் திணிக்கக் கூடாது கட்டாயப்படுத்தக்கூடாது எங்கள் தாய் மொழியைத்தான் போற்றுவோம் எங்கள் தாய் மொழிக்கு தான் முக்கியத்துவம் கொடுப்போம் என்கிறோம். எங்களுக்கென்று ஒரு தமிழ் தாய் வாழ்த்து உள்ளது.


5000 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பு எங்களை தமிழர்கள் பயன்படுத்தி உள்ளார்கள் என்பதை கொற்கை ஆய்வு மூலமாக தெரிய வந்துள்ளது,
அகழ்வாராய்ச்சிகள் மூலமாக தமிழ் மொழியின் பெருமையும் தமிழர்களின் பாரம்பரியமும் வெளிப்பட்டு உள்ளது. இதனால் அவர்களுக்கு வயிறு எரிகிறது.


தமிழ்நாடு என்று பேரறிஞர் அண்ணா வைத்த பெயரை வேண்டாம் என்று சொல்வதற்கு இங்கு ஒருவர் (ஆளுநர் ஆர்.என்.ரவி) இருக்கிறார்,பாஜக ஆட்சியில் ஆளுநர்கள் பாஜக கொள்கை பிரச்சார செயலாளராக உள்ளனர்,மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறு சீரமைப்பு செய்தால் தமிழகத்திற்கு 8 எம்பி தொகுதிகள் குறையும்,40 எம்பிக்கள் இருக்கும்போதே நம்முடைய குரல் அங்கு கேட்க மாட்டேங்குது,தென்னிந்தியாவில் தொகுதிகளை  குறைத்து விட்டு வட இந்தியாவில் மட்டும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று நினைக்கின்றனர்.



பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள இன்றைய அறிக்கையை பார்த்தால் ஒவ்வொரு திமுக தொண்டர்களும் கொதித்து எழுந்து விடுவார்கள்,மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள் என்றால் உங்கள் வீட்டு மக்களா என்று கேள்வி கேட்கிறார் எவ்வளவு ஏத்தம் அவருக்கு (அண்ணாமலை)


படிப்படியாக கட்சியில் பணியாற்றி, மிசா காலத்தில் தண்டனை அனுபவித்து இன்றைக்கு தமிழக முதல்வராக மு க ஸ்டாலின் உள்ளார். எங்களுக்கு சூப்பர் முதல்வர் தான், நாடாளுமன்றத்தில் இன்றைக்கு ஒன்றிய கல்வித் துறை  அமைச்சர் தர்மேந்திர பிரதான்  தமிழக எம்பிக்களை அவதூறாக பேசியுள்ளார். அவ்வளவு அராஜக போக்குவுடன் ஒன்றிய அரசு உள்ளது . நாம் போராடுவோம் நிச்சயமாக வெல்லுவோம் என்றார்.நடைபெற்ற கண்டனப்பொதுக்கூட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வு குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் மார்கண்டேயன் கண்டன உரையாற்றினார். கூட்டத்தின்  இறுதியில் மாற்றுக்கட்சியை சேர்ந்த இளைஞர்கள் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர்.மேலும் கூட்டத்தில் மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள், ஒன்றிய,பேரூர் கழக இளைஞர் அணி அமைப்பாளர்கள்,துணை அமைப்பாளர்கள்,வார்டு செயலாளர்கள்,வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.