தூத்துக்குடி மாவட்டத்தில் 2650 காவல்துறையினருக்கு இலவச பேருந்து பயண அட்டை!


காவல்துறையினரின் கோரிக்கையை ஏற்று காவலர் முதல் ஆய்வாளர் வரை அவர்களுக்கு அரசால் வழங்கப்படும் பிரத்தியேக பயண அட்டையை பயன்படுத்தி அரசு பேருந்துகளில் தாங்கள் பணி செய்யும் மாவட்டத்திற்குள் பணி நிமித்தமாக எந்த பகுதிக்கும் இலவசமாக பயணம் செய்யலாம் என்றும், இதற்காக நவீன அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்திருந்தார்.


அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரியும் காவல்துறையினருக்கு அரசால் வழங்கப்பட்ட 2650 இலவச பேருந்து பயண அட்டையினை (Free Bus Pass)  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து காவல்துறையினருக்கு வழங்கினார்.