முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5-வது நினைவு தினத்தையொட்டி கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் அருகே அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்துக்கு நகர திமுக செயலாளர் கா.கருணாநிதி தலைமையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், பொதுக்குழு உறுப்பினர் இரா.ரமேஷ், ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், ஏஞ்சலா சின்னத்துரை, மாவட்ட பிரதிநிதி மாரிச்சாமி, மாவட்ட பொருளாளர் ராமமூர்த்தி, அவைத்தலைவர் முனியசாமி, வர்த்தக அணி துணை அமைப்பாளர் சேதுரத்தினம் , நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி மத்திய ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன் தலைமையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சந்தானம், மாவட்ட இலக்கிய அணி தலைவர் சோழபெருமாள், விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சண்முகராஜ், பொதுக்குழு உறுப்பினர் பீட்டர், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சூர்யராஜ், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மாரீஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இனாம் மணியாச்சி விலக்கு பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பொறியாளர் அணி துணை அமைப்பாளர் இரா.ரமேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நாலாட்டின்புதூரில் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நாலாட்டின்புதூர் பஞ். தலைவர் கடல்ராணி அந்தோணிராஜ், ஒன்றிய கவுன்சிலர் முத்துமாரி தாமோதர கண்ணன், மாவட்ட அயலக பிரிவு தலைவர் சுப்புராஜ், துணை தலைவர் சுப்புராயன் முருகன், கடலையூரில் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணை தலைவர் பாலமுருகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தூத்துக்குடி
கோவில்பட்டியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினம் கடைபிடிப்பு.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பா.ஜ.கவினர் அரை நிர்வணப்போராட்டம்.
அடுத்த
கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி கூலி தொழிலாளி உயிரிழப்பு.
இதையும் படிக்கலாம்
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026
ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!
12 Jul 2026
“ உண்ட வீட்டுக்கு இரண்டகம்” செய்த கொலை குற்றவாளி!
12 Jul 2026