எட்டையபுரம் அரசு மகளிர் பாலிடெக்னிக் மாணவி பேராசிரியர் மீது பாலியல் புகார் ; கோட்டாட்சியரிடம் த.வெ.க-வினர் மனு!

தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் எட்டையாபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வரும் மாணவி ஒருவர், அக்கல்லூரியில் பணிபுரிந்து வரும் பேராசிரியர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அளித்த புகார் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மாதர் சங்கத்தினர், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட நிர்வாகி பிரவீன்குமார் வழிகாட்டுதலின் படி, கோவில்பட்டி கிழக்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய நிர்வாகி சங்கரலிங்கம் தலைமையில், எட்டையபுரம் நகர நிர்வாகி மணி முன்னிலையில், சுமதி ராமுத்தாய், கவிதா, பாரதி, மாரீஸ்வரி ஒன்றிய நிர்வாகி போத்தியம்மாள், இளைஞர் அணி முத்து மற்றும் கட்சியினர் பலர் கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் சென்று கோட்டாட்சியர் மகாலட்சுமியிடம் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அக்கல்லூரியில் பயின்று வரும் அனைத்து மாணவிகளுக்கும் பாதுகாப்பு வழங்க கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் மனு அளித்து கேட்டுக்கொண்டனர். மேலும் விரைவில் இந்த மாணவி பாலியல் புகாருக்கு தீர்வு காணாவிட்டால் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பாக போராட்டங்கள் தொடரும் என தெரிவித்துள்ளனர்....