எட்டையாபுரம் சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற ஆட்டுச் சந்தை மந்தம் : விலை அதிகம் விற்பனை குறைவு!

தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் ஆட்டுச்சந்தை புகழ்பெற்ற ஆட்டுச் சந்தையாகும், இங்கு வாரந்தோறும் சனிக்கிழமை மதுரை,தேனி, ராமநாதபுரம்,சிவகங்கை,திருநெல்வேலி,தென்காசி,விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான வெள்ளாடு,சீனி வெள்ளாடு,செம்மறி ஆடு,கொடியாடு என பல்வேறு வகைகளான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வருவதும், அதை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வாங்கிச்செல்வதும் வழக்கம்.

இங்கு சாதாரண வாரங்களில் 1 கோடி ரூபாய் முதல் 2 கோடி ரூபாய் வரை ஆடுதல் விற்பனையாவது வழக்கம். தைப்பொங்கல்,தீபாவளி,கிறிஸ்துமஸ்,ரம்ஜான்,பக்ரீத் உள்ளிட்ட பண்டிகை காலங்களில், பல கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனையாவது வழக்கம். இந்நிலையில் வருகின்ற 17ஆம் தேதி கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடப்படும் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து  பல்வேறு வியாபாரிகள் ஆடுகளை வாங்க குவிந்தனர், ஆனால் ஆடுகளின் விலை அதிகமாக இருந்ததால்,பெரும்பாலான வியாபாரிகள் ஆடுகளை வாங்க முன்வரவில்லை, இதனால் பக்ரீத் ஆடு விற்பனை கலை இழந்து மந்தமாக காணப்பட்டது.