ஓட்டப்பிடாரம் அருகே நீரில் மூழ்கி மூதாட்டி உயிரிழப்பு:போலீசார் விசாரணை?


தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பசுவந்தனை - குமரட்டையாபுரம் கிராமத்தை சேர்ந்த கணபதி என்பவரின் மனைவி  சிவகாமி (67) இவர் வீட்டில் இருந்து கண்மாய்க்கு குளிக்க சென்றவர் வீடு திரும்பாததால் வீட்டில் உள்ளோர் அங்கு சென்று பார்த்தபோது, சிவகாமி கண்மாய் நீரில் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார், மூதாட்டியின் உடலை கைப்பற்றிய பசுவந்தனை காவல் நிலைய போலீசார் உடற்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், இதுகுறித்து பசுவந்தனை காவல் நிலைய போலீசார் மூதாட்டி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா?என்பது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.